எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - இளையராஜா
01:31 PM Jun 03, 2025 IST | Murugesan M
லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து தமிழகத்தில் நடத்தப் போவதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை கோடம்பாக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Advertisement
அப்போது பேசிய அவர், தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை, அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து ஆகஸ்ட் 2-ஆம் தேதி தமிழகத்தில் நடத்தப் போவதாக இளையராஜா கூறினார்.
Advertisement
Advertisement