எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் - பிரதமர் மோடி புகழாரம்!
07:56 AM Apr 15, 2025 IST | Ramamoorthy S
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் சமூக பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்! நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
Advertisement
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement