எனது மனைவியை குறிவைத்து பழிவாங்கினார் அசிம் முனீர் - இம்ரான் கான்
03:07 PM Jun 07, 2025 IST | Murugesan M
பாகிஸ்தான் பீல்டு மார்ஷல் அசிம் முனீரால் தனது மனைவி குறிவைத்துப் பழிவாங்கப்பட்டதாக அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இம்ரான் கான், தனது பதவிக் காலத்தில் ஐஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் பதவியிலிருந்து அசீம் முனீரை நீக்கியதாகவும், இதற்காகத் தனது மனைவி புஷ்ரா பீபியை இடைத்தரகர்கள் மூலம் அணுகி அவர் விவாதிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
ஆனால், புஷ்ரா பீபி திட்டவட்டமாக மறுத்ததால் 14 மாத காலம் அநியாயமாகச் சிறை வைக்கப்பட்டதாகவும், இதற்கு அசிம் முனீரே காரணம் எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement