For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

எலான் மஸ்க் புது கட்சி? - அமெரிக்க அரசியலில் அதிரடியா?

08:20 PM Jun 09, 2025 IST | Murugesan M
எலான் மஸ்க் புது கட்சி    அமெரிக்க அரசியலில் அதிரடியா

அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான மோதலைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சியைத் தொடங்க தீவிரம் காட்டி வருகிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவை “புலம் பெயர்ந்தோர் நாடு” என்று சொல்வார்கள். புது உலகம் என்று கூறப்பட்ட இந்த நிலப் பகுதிக்குப் பிரிட்டனிலிருந்து பலர் இடம்பெயர்ந்து குடியேறினார்கள். மத துன்புறுத்தல் காரணமாகப் பிரிட்டன் அரசே பலரை இங்கே குடியமர்த்தியது. அதனையடுத்து, மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் மக்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். அப்படிக் குடியேறிய 13 காலனிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பிரிட்டன் ஆட்சியில் கீழ் இருந்தது.

Advertisement

ஒருநாள் கப்பலில் வந்திறங்கிய TEA டீ க்கு  வரி செலுத்தமாட்டோம் என்று தொடங்கிய போராட்டத்தை அடக்க, அமெரிக்கா மீது முழு போரைத் தொடுத்தது இங்கிலாந்து. அந்த போரில், பிரான்ஸின் இராணுவ உதவியுடன், அமெரிக்கா வென்றது. பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெறுவதுதான் நல்லது என்று 13 காலனிகளும் முடிவு செய்தனர். 13 காலனிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய “கான்டிநென்டல் காங்கிரஸ் சுதந்திர தின பிரகடனத்தை வெளியிட்டனர். இப்படித்தான் United States of America என்ற நாடு உருவானது.

அன்றிலிலிருந்து ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய இரு கட்சிகளே அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தச் சுழலில்,1849 ஆம் ஆண்டில் The America Party என்ற பெயரில் ஒரு கட்சி தொடங்கப் பட்டது. ஒரு ரகசிய சங்கமாக இயங்கியது.

Advertisement

இக்கட்சியினர், பூர்வீகமாக அமெரிக்காவில் பிறந்த குடிமக்களுக்கு மட்டுமே ரகசியமாகச் சந்தித்து புதிய உறுப்பினர்களாகச் சேர்த்து வந்தனர்.  இது குறித்து யார் கேள்வி கேட்டாலும் ​​ எதுவும் தனக்குத் தெரியாது" என்று பதிலளித்தனர். இதனால், The America Party யை KNOW NOTHING  என்று அழைக்கத் தொடங்கினர்.

இந்த கட்சியின் பெயரில் புதிய கட்சியை உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தொடங்கப் போவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில்,அமெரிக்காவின் 47வது அதிபரான ட்ரம்ப்,  அரசின் தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதற்காக, எலான் மஸ்க் தலைமையில் அரசின் செயல்திறன் துறையை உருவாக்கினார்.

இந்நிலையில், ட்ரம்ப்  கொண்டு வந்த One Big Beautiful Bill என்ற வரி மற்றும் செலவு மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சனம் செய்த்தோடு ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்தும் விலகினார்.  தேசிய கடனை 4 ட்ரில்லியன் டாலராக அதிகரிக்கும் மசோதாவின் பரிந்துரையையும்  மஸ்க் கடுமையாக எதிர்த்துள்ளார்.

தான் இல்லை என்றால்  ட்ரம்ப் அதிபர் தேர்தலில் தோற்றிருப்பார் என்று கூறிய எலான் மஸ்க், ட்ரம்பை நன்றி இல்லாதவர் என்றும் விமர்சனம் செய்திருந்தார். மேலும், தற்போதைய அதிபர் ட்ரம்பை நீக்கிவிட்டு, துணை அதிபர் ஜேடி வான்ஸை அதிபராக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பதாகக் கூறினார்

பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறையில் தற்கொலை செய்து கொண்ட ஜெஃப்ரி எப்ஸ் டைனின் ஆவணங்களில் ட்ரம்ப் பெயரும் உள்ளதாகக் கூறி, எலான் மஸ்க் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, தனது எக்ஸ் தளத்தில் அமெரிக்காவின் 80 சதவீத நடுத்தர மக்களின் பிரதிநிதியாக ஒரு அரசியல் கட்சி தொடங்குவதற்கான நேரம் வந்து விட்டதா ? என்று எலான் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார். அதற்கு ஆம் என்றும் புதிய கட்சி தேவை என்றும் 80 சதவீத பேர் வாக்கு அளித்துள்ளனர். மக்கள் தங்கள் கருத்தைச் சொல்லிவிட்டார்கள்.எனவே  நடுத்தர 80 சதவீத மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி வேண்டும் என மஸ்க் பதில் அளித்திருந்தார்.

The America Party என்ற பெயரைப் பரிந்துரை செய்தவர்க்கு, இந்தப் பெயர்  உண்மையாவே அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் பெயர் என்று எலான் மஸ்க்  பதிலளித்தார். எலான் மஸ்க்கின் புதிய கட்சி கருத்துக்கு அதிக அளவில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் விரைவில் அவர் அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதாவது, அமெரிக்காவில் இரு கட்சி அரசியலை எலான் மஸ்க் உடைக்கப் பார்க்கிறார் என்று கூறப் படுகிறது.

அமெரிக்க வரலாற்றில், அதிபர் பதவிக்கு மூன்றாம் தரப்பு வேட்பாளர்கள் அதிகம் சத்தம் போட்டுள்ளனர் என்றாலும், யாரும் பெரிதாக வெற்றியை நோக்கி நகரவே இல்லை.  1912-ல் தியோடர் ரூஸ்வெல்ட்டின் முற்போக்குக் கட்சி வெற்றிக்கு மிக அருகில் வந்தது. இதில், தியோடர் ரூஸ்வெல்ட் குடியரசு கட்சி சார்பில் அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1992-ல் Henry Ross Perot ஹென்றி ரோஸ் பெரோட் 19 சதவீத வாக்குகளைப் பெற்றார். 1968-ல் ஜார்ஜ் வாலஸ் ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றினார். ஆனால் நீடித்த அரசியல் களத்தில் மூன்றாவது வேட்பாளர் யாரும் வெற்றி பெறவில்லை.

அமெரிக்காவில் வாக்குச் சீட்டுச் சட்டங்கள் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும். இது, புதிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றியைத் தடுப்பதற்காகவே வடிவமைக்கப் பட்டுள்ளன.  அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும், கட்சி உள்கட்டமைப்பு,  களப் பணியாளர்கள் மற்றும் தேர்ந்த சட்டக் குழுக்கள் ஆகியவற்றை  புதிய கட்சிக்கு உருவாக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆன்லைனில் 80 சதவீத மக்கள் ஆதரவைப் பெற்ற எலான் மஸ்க் ஆஃப் லைனில் பெற முடியுமா ? என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Advertisement
Tags :
Advertisement