For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஐக்கிய அரபு அமீரகம் : வழியில் குறுக்கிட்ட பெண்ணுக்கு வழிவிட்ட பிரதமர்!

04:46 PM Oct 31, 2025 IST | Murugesan M
ஐக்கிய அரபு அமீரகம்    வழியில் குறுக்கிட்ட பெண்ணுக்கு வழிவிட்ட பிரதமர்

துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமின் வழியில் குறுக்கிட்ட பெண்ணுக்கு வழிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் சாதாரணமாகத் தனது பாதுகாவலர்களுடன் பொது இடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வழியைக் குறுக்கிட்டு பெண் ஒருவர் கடந்து செல்ல முயன்றார்.

Advertisement

பிரதமரின் பாதையைக் குறுக்கிட்டதால் பாதுகாவலர்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால் ஷேக் முகமது பாதுகாவலர்களைத் தடுத்து, அந்தப் பெண்ணுக்கு வழிவிட்டார்.

இந்த வீடியோ சாதாரண குடிமக்களுக்கு மதிப்பளிக்கும் தலைவரின் பெருந்தன்மையையும் எளிமையையும் வெளிப்படுத்துவதாகச் சமூக ஊடகங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement