ஐபிஎல் இறுதிப்போட்டியில் யார் வென்றாலும் மன வேதனை உறுதி - எஸ்.எஸ்.ராஜமௌலி
12:50 PM Jun 03, 2025 IST | Murugesan M
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அல்லது பெங்களூரு என யார் வென்றாலும் மன வேதனை உறுதி எனப் பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 3 அணிகளை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற திறமையான வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும், 18 ஆண்டுகளாகச் சிறப்பாக விளையாடி பெங்களூரு அணிக்காகத் தனது உழைப்பை அர்ப்பணித்த விராத் கோலியும் ஐபிஎல் கோப்பைக்குத் தகுதியானவர்களே எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், முடிவு எதுவாயினும் மன வேதனை என்பது உறுதி என அவர் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement