For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஐபிஎல் கிரிக்கெட் - ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி!

07:49 AM Mar 31, 2025 IST | Ramamoorthy S
ஐபிஎல் கிரிக்கெட்   ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  டெல்லி அணி வீழ்த்தியது,

ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி, விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் அனிகேத் வர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். டெல்லி அணி தரப்பில் மிச்சல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

Advertisement

தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் மூலம் அந்த அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் டூப்ளிசிஸ் அரை சதம் அடித்து அசத்தினார். சிறப்பாக பந்து வீசிய ஹைதராபாத் அணி வீரர் சீஷான் அன்சாரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement