For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஐபிஎல் தொடர் - லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு!

07:57 AM May 28, 2025 IST | Ramamoorthy S
ஐபிஎல் தொடர்   லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு

ஐபிஎல் தொடரில் லக்னோவை வீழ்த்திய பெங்களூரு அணி முதல் பிளே ஆப் சுற்றில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.

18-வது ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நடைபெற்ற 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 118 ரன்களும், மிட்செல் மார்ஷ் 67 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 230 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜிதேஷ் சர்மா 85 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Advertisement

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை உறுதி செய்த பெங்களூரு அணி முதல் பிளே ஆப் சுற்றில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.

Advertisement
Tags :
Advertisement