ஐபிஎல் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பெருமை!
01:54 PM May 20, 2025 IST | Murugesan M
ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை பிளே-ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.
நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதன் மூலம் 2014-ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாகப் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Advertisement
இதன் மூலம் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. அவர் கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் டெல்லி அணியையும், 2024-ல் கொல்கத்தா அணியையும், நடப்பாண்டில் பஞ்சாப் அணியையும் பிளே ஆஃப் சுற்றுக்கு வழி நடத்திச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement