For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேர் பணியிட மாற்றம் - 3 பேருக்கு பதவி உயர்வு!

11:46 AM Jun 11, 2025 IST | Ramamoorthy S
ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேர் பணியிட மாற்றம்   3 பேருக்கு பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில், சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், சென்னை கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி, சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, தமிழ்நாடு செய்தி அச்சு மற்றும் ஆவணங்கள் லிமிடெட் துணை காவல் கண்காணிப்பாளராகவும், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டால், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை ஆணையராகவும், குளச்சல் ஏஎஸ்பி கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை ஆணையராகவும், நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement