ஓசூர் அருகே மருத்துவமனை வாசலில் குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி!
11:29 AM Jun 10, 2025 IST | Murugesan M
ஓசூர் அருகே 10-ஆம் வகுப்பு மாணவிக்கு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ருத்ரேஷ் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
Advertisement
இவருக்குத் திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள 10-ஆம் வகுப்பு மாணவியிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
அந்த மாணவி கர்ப்பமானதை அறிந்த ருத்ரேஷ், யாருக்கும் தெரியாமல் அவரை கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Advertisement
அப்போது, மருத்துவமனை வாசலிலேயே மாணவிக்குக் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் ருத்ரேஷை கைது செய்தனர்.
Advertisement