For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கஞ்சா அடிப்பதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்

06:16 PM Jul 05, 2025 IST | Murugesan M
கஞ்சா அடிப்பதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்

சென்னை பல்லாவரத்தில் கஞ்சா அடித்ததைத் தட்டிக்கேட்ட  அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பி.வி. வைத்தியலிங்கம் சாலையில் கஞ்சா போதையில் இருந்த 3 இளைஞர்கள், அதிமுக நிர்வாகி பாலசுப்பிரமணியன் என்பவரின் மகளின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர்.

Advertisement

இது குறித்துத் தட்டிக்கேட்கச் சென்ற பாலசுப்பிரமணியனை கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 3 இளைஞர்களும் சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.

இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள், படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement

சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பிடித்த போலீசார், மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

Advertisement
Tags :
Advertisement