கடலூர் : சாலையோரம் நடந்து சென்ற ராட்சத முதலையால் வாகன ஓட்டிகள் அச்சம்!
07:29 PM Feb 04, 2025 IST | Murugesan M
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சாலையோரம் ஒய்யாரமாக நடந்து சென்ற ராட்சத முதலையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
கூடுவெளிச்சாவடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்தில் இருந்த ராட்சத முதலை, அங்கிருந்து வெளியேறி சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் நடந்து சென்றது.
Advertisement
இதைக்கண்டு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்த நிலையில், முதலையை வனத்துறையினர் பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் முதலை ஒய்யாரமாக நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement