கந்தர்வக்கோட்டை : சிக்குன்குனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!
12:27 PM Feb 05, 2025 IST | Murugesan M
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கணபதிபுரத்தில் பரவி வரும் சிக்குன்குனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கணபதிபுரத்தில் கடந்த 2020ம் ஆண்டு கட்டப்பட்ட கழிவுநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாகவும், கடந்த 15 நாட்களாக குழந்தைகள், முதியவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் சிக்குன்குனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும், குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement