கனடாவில் இந்தியரை குறிவைத்து சரமாரி தாக்குதல்!
01:07 PM Nov 04, 2025 IST | Murugesan M
கனடாவில் இந்தியர் மீது மதுபோதையில் இருந்த நபர் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ஒரு கஃபேயில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியரைப் பார்த்து பெரிய இவனா நீ? என்று கேள்வி எழுப்பியவாறே அந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
Advertisement
பாதிக்கப்பட்ட இந்தியர், "உங்களுக்கு இதனால் சிக்கல் வரும்" என்று எச்சரித்தபோதும், அவர் தாக்குதலை நிறுத்தவில்லை.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி கனடாவில் குடியேறியவர்கள் குறிப்பாக இந்தியர்கள், எதிர்கொள்ளும் இனவெறி மற்றும் பாகுபாடு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement