கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : மீனவ கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம்!
01:36 PM Apr 16, 2025 IST | Murugesan M
கன்னியாகுமரியில் கள்ளக்கடல் எனப்படும் கடல் சீற்றம் காரணமாக மீனவ கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளக்கடல் காரணமாக ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஒன்றரை மீட்டர் உயரத்திற்கும் மேல் பேரலைகள் எழும்பும் என இந்திய கடல்சார் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
இதனால், சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக ராமன்துறை, புத்தன்துறை மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர் சேதமடைந்து வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஊருக்குள் கடல்நீர் புகும் அபாயம் உள்ளதால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த கடலரிப்பு தடுப்புச் சுவரைச் சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement