For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கரூர் கூட்ட நெரிசல் - தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

03:17 PM Nov 03, 2025 IST | Murugesan M
கரூர் கூட்ட நெரிசல்   தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை

கரூர்  கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னை பனையூரில் உள்ள தவெக  தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றது.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், கரூரில் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

அதன் தொடர்ச்சியாக, சென்னை  பனையூரில் உள்ள தவெக-வில் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள், வாகனத்தின் அளவு மற்றும் அது தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

Advertisement
Tags :
Advertisement