For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் - விஜய் குற்றச்சாட்டு!

06:30 PM Nov 05, 2025 IST | Ramamoorthy S
கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய்   விஜய் குற்றச்சாட்டு

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது, தவெகவுக்கு எதிராக வன்ம அரசியல் செய்யவதாக தெரிவித்தார்.

Advertisement

கரூர் சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் வன்மத்துடன் பேசியுள்ளதாகவும், பரப்புரைக்காக  கேட்ட இடத்தை கொடுக்காமல் கடைசி வரை இழுத்தடித்ததாகவும் அவர் சாடினார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர அவசரமாக தனி நபர் ஆணையத்தை முதல்வர் அமைத்தார் என்றும், ஆனால் தனிநபர் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் அரசு அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு நடத்தியதாகவும் அவர் கூறினார்.

Advertisement

திமுக அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம் தனிநபர் ஆணையத்தை வீட்டிற்கு அனுப்பியதாகவும் விஜய் தெரிவித்தார்.

Advertisement
Tags :
Advertisement