கர்நாடகாவில் 'தக் லைப்' பட வெளியீடு ஒத்திவைப்பு!
05:31 PM Jun 03, 2025 IST | Murugesan M
கர்நாடகாவில் 'தக் லைப்' படம் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Advertisement
இதனை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம், கமல்ஹாசன் தரப்பிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.
கர்நாடக பிலிம் சேம்பர் தலைவர் நரசிம்மலுக்கு கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில் மன்னிப்பு கேட்காமல் ஏன் சுற்றி வளைத்துப் பேசுகிறார் எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
Advertisement
இந்நிலையில் கர்நாடகாவில் தக் லைப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை ஒத்திவைப்பதாகக் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
Advertisement