கர்நாடகா : காங்கிரஸ் - பாஜகவினர் இடையே மோதல்!
04:51 PM Nov 03, 2025 IST | Murugesan M
கர்நாடக மாநிலம் பாகல்கோட் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் - துணைத் தலைவர் தேர்தலின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டனர்.
பாகல்கோட்டின் ரன்னபெலகலி கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறவிருந்தது.
Advertisement
அப்போது வாக்களிக்க அலுவலகத்திற்கு வந்த உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சியினர் தடுக்க முயன்றனர்.
இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜகத் தொண்டர்கள் ஒருவரையொருவர் தடிகளால் தாக்கிக் கொண்டனர். தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்துத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement