கர்நாடகா : பணம் கொடுத்து கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது!
02:34 PM Apr 10, 2025 IST | Murugesan M
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பணம் கொடுத்து கணவனைக் கொன்றுவிட்டு காவல்துறையிடம் நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த வெங்கடேஷ், நீலவேணி தம்பதியினர் ஷாமியான தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், கனேகல் சாலையில் உள்ள ராணித்தோட்டாவில் வெங்கடேஷ் கொலை செய்யப்பட்டார்.
Advertisement
இதுகுறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இறந்த வெங்கடேஷின் மனைவிதான் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பணம் கொடுத்து கணவனைக் கொன்று நாடகமாடிய நீலவேணி, ஆனந்த் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement