கர்நாடகா : லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் - அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் சூழல்!
11:38 AM Apr 16, 2025 IST | Murugesan M
கர்நாடகாவில் 2-வது நாளாகத் தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடகாவில் டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
இதனையடுத்து மாநிலம் முழுவதும் 6 லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக வேலை நிறுத்தம் தொடர்பாக அரசுடன், லாரி உரிமையாளர்கள் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இன்றைய தினம் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் மூலம் வேலை நிறுத்தம் முடிவுக்கு வருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர் வேலை நிறுத்தத்தால் கர்நாடகாவில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement