கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா!
01:29 PM Jun 07, 2025 IST | Ramamoorthy S
கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது குற்றம் சாட்டி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Advertisement
தொடர்ந்து அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள தடை விதித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
Advertisement
இந்நிலையில், கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
Advertisement