கர்நாடக மாநிலத்தில் லாரி ஸ்ட்ரைக் : காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை உயரும் அபாயம்!
11:50 AM Apr 15, 2025 IST | Murugesan M
கர்நாடகாவில் நடைபெறும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் டீசல் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டணம் உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
Advertisement
கர்நாடகாவில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளதால், தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் ஓசூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடகாவில் சுமார் 6 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement