கள்ளக்குறிச்சி : அவசர அவசரமாக புற்கள் மீது சிமெண்ட் சாலை - வீடியோ வைரல்!
07:57 AM Nov 05, 2025 IST | Murugesan M
உளுந்தூர்பேட்டை அருகே அவசர அவசரமாகப் புற்கள்மீது சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தமங்கலம் குடோன் தெருவில் மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியமாகக் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதனையடுத்து சாலை அமைக்கக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, சாலை அமைத்ததாக ஊராட்சி நிர்வாகம் ஏற்கனவே பணத்தை ஊழல் செய்ததாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது.
Advertisement
இந்நிலையில், புற்களை அகற்றாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் அவசர அவசரமாகச் சிமெண்ட் சாலை அமைத்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், தரமான சாலை அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement