For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கள்ளச்சாராய விற்பனையை நிறுவனப்படுத்தியதற்கு ஸ்டாலின் மாடல் அரசு வெட்கப்பட வேண்டும் - இபிஎஸ் விமர்சனம்!

11:56 AM Feb 05, 2025 IST | Sivasubramanian P
கள்ளச்சாராய விற்பனையை நிறுவனப்படுத்தியதற்கு ஸ்டாலின் மாடல் அரசு வெட்கப்பட வேண்டும்   இபிஎஸ் விமர்சனம்

கள்ளச்சாராய விற்பனையை நிறுவன மயப்படுத்தியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ்,  மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சி மரணங்களில் இருந்து திமுக அரசு பாடம் கற்கவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப்படுத்தியதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என விமர்சித்துள்ள இபிஎஸ், திமுக கட்சிக்காரர்கள் என்ன கொம்பு முளைத்தவர்களா?, அவர்கள் தவறு செய்தால் காவல்துறை கண்டுகொள்ளாதா? என கேள்விகளை எழுப்பியுள்ளார்.

திமுகவினர் சகல குற்றங்களையும் செய்வதற்குதான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்களா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ள இபிஎஸ்,  கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடைய அனைவரையும் எந்த குறுக்கீடும் இன்றி காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement