கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!
06:51 PM Oct 26, 2025 IST | Murugesan M
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை முருகன் கோயிலில், தாரகாசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோயிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
Advertisement
அதன்படி இந்தாண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் 5ம் நாளான இன்று, சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை, முருகப்பெருமான் வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, "வெற்றி வேல், வீரவேல்” என விண்ணதிர பக்தி முழக்கம் எழுப்பினர். பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Advertisement
Advertisement