காசா : மருத்துவமனையின் கீழே சுரங்கம் - வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்!
12:18 PM Jun 10, 2025 IST | Murugesan M
காசாவில் உள்ள மருத்துவனையின் கீழே ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்க பயன்படுத்திய சுரங்கம் தொடர்பான வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைகளைத் தாக்கி அப்பாவி மக்களை கொல்வதாக உலக நாடுகள் குற்றம் சாட்டிவருகின்றன.
Advertisement
ஆனால், மருத்துவமனைகளின் கீழே சுரங்கம் அமைத்து ஹமாஸ் இயங்கி வருவதால் மட்டுமே தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில் ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் உடலை சுரங்கமொன்றில் இருந்து மீட்டுள்ளதாகக் கூறியுள்ள இஸ்ரேல், அதனைத் தொடர்ந்தே தற்போது சுரங்கத்தின் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement