For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

காசியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சமுதாய நிலம் மீட்பு - பிரதமர் மோடிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நன்றி!

01:20 PM Nov 03, 2025 IST | Ramamoorthy S
காசியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சமுதாய நிலம் மீட்பு   பிரதமர் மோடிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நன்றி

காசியில் நகரத்தார் சமுதாயத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுக் கொடுத்ததற்காக பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர நிர்வாகத்தின் துணைத்தலைவர் முத்தையா, நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தவர்கள் உத்தரபிரதேசத்தில் மிகப்பெரிய நில மோசடி கும்பல் என்றும், சுமார் 40 ஆண்டுகள் அவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார். நிலத்தை மீட்டுக் கொடுத்த பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் முத்தையா தெரவித்துள்ளார்.

Advertisement

மீட்கப்பட்ட நிலத்தில் ஹிந்து ஆன்மீக பக்தர்களுக்காக ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கழகம் பிரம்மாண்ட சத்திரம் கட்டியுள்ளதாக சத்திரத்தின் மற்றொரு துணைத்தலைவர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.

இந்த சத்திரம் 139 அறைகளுடனும், நவீன வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளதாக கூறிய வீரப்பன், இதிலிருந்து கிடைக்கும் நிதி, பொருளாதார தேவை கொண்ட மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்

Advertisement

Advertisement
Tags :
Advertisement