காஞ்சிபுரத்தில் பாஜக பயிலரங்கம் - மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனை!
07:47 AM Jun 07, 2025 IST | Ramamoorthy S
பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் காஞ்சிபுரம் பாஜக சார்பில் பயிலரங்கம் நடைபெற்றது.
அப்பொழுது மோடி அரசின் சாதனைகளான ஆயுஷ்மான் பாரத் , கல்விக் கொள்கை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி ,திறன் மேம்பாடு, இளைஞர்களை அதிகாரத்தில் கொண்டு வந்து வழிநடத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை மக்களுக்கு எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது குறித்து பயிலரங்கம் நடைபெற்றது .
Advertisement
மேலும் கடந்த காங்கிரஸ் ஆட்சியை விட தற்போதைய பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் இந்த பயிலரங்கத்தில் பேசப்பட்டது.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் பெருமாள்,முன்னாள் மாநில செயலாளர் ராஜவேலு, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சாந்தலட்சுமி, உள்ளிட்ட மாவட்ட பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Advertisement
Advertisement