காஞ்சிபுரம் : அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்!
12:18 PM Apr 15, 2025 IST | Murugesan M
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக கணினி, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினர்.
அந்த பள்ளியில் கடந்த 1998ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
Advertisement
மேலும், தங்களுக்குக் கல்வி போதித்த ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்து பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் வளர்ச்சிக்காக 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் அவர்கள் வழங்கினர்.
Advertisement
Advertisement