For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

காதலியின் குழந்தைகளை செல்போன் சார்ஜர் வயரால் கடுமையாக தாக்கி காயத்தின் மீது மிளகாய் தூளை கொட்டிய கொடூரன்!

12:16 PM Feb 03, 2025 IST | Murugesan M
காதலியின் குழந்தைகளை செல்போன் சார்ஜர் வயரால் கடுமையாக தாக்கி காயத்தின் மீது மிளகாய் தூளை கொட்டிய கொடூரன்

ஆந்திராவில் திருமணத்தை மீறிய உறவால் பெண்ணின் குழந்தைகளை செல்போன் சார்ஜர் ஒயரால் இளைஞர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஏலூரு அருகே உள்ள ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்த சசி என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, அதே பகுதியைச் சேர்ந்த பவன் என்பவருடன் வசித்து வருகிறார்.

Advertisement

சசியின் 3 குழந்தைகளையும் நாள்தோறும் பவன் அடித்து துன்புறுத்தி வந்த நிலையில், சம்பவத்தன்று 3 குழந்தைகளையும் செல்போன் சார்ஜர் ஒயரால் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், காயத்தின் மீது மிளகாய் தூளை தூவி கொடுமைப்படுத்தியுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தகவலறிந்து வந்த போலீசார், பவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில நாட்களாகவே பவன் தங்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும், தங்களது தாய் ஒன்றும் செய்ய இயலாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement