காவல்துறைக்கு பயந்து புகார் அளிக்கவில்லை - தேவதானப்பட்டி இளைஞர் பேட்டி!
போலீசார் அடித்துக் கொன்று விடுவார்கள் என பயந்து புகார் அளிக்கவில்லை என
தேவதானப்பட்டி காவல்நிலைய போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணைக் கைதியை போலீசார் கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் ரமேஷ், எஸ்.பி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது பேட்டியளித்த அவர், போலீசார் மீது புகார் தெரிவித்தால் தன்னை கொலை செய்து விடுவார்கள் என அச்சம் அடைந்ததாக கூறினார்.
தனக்கும் தனது குடும்பத்திற்கும், பாதிப்பு ஏற்படும் என்பதால் புகார் அளிக்கவில்லை எனவும் வீடியோ வெளியானதை அடுத்து மதுரையில் உள்ள வழக்கறிஞரின் பாதுகாப்பில் இருந்ததாகவும் கூறனார்.