காவிரி ஆற்றின் மணல் திட்டுகளில் உள்ள கருவேலமரங்கள் இதுவரை அகற்றப்படவில்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு!
02:05 PM Jun 11, 2025 IST | Murugesan M
மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், காவிரி ஆற்றின் மணல் திட்டுகளில் உள்ள கருவேலமரங்கள் இதுவரை அகற்றப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரானது சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்கள் வழியாகக் கடைமடைக்குச் செல்கிறது.
Advertisement
காவிரி நீரை நம்பி 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குருவைச் சாகுபடி செய்து வரும் நிலையில், காவிரி ஆற்றின் மணல் திட்டுகளில் உள்ள கருவேலமரங்கள் அகற்றப்படாமல் உள்ளதாகவும், காவிரி ஆற்றை முழுமையாகத் தூர்வாரவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கருவேலமரங்களால் காவிரி நீர் முழுமையாகக் கடைமடைக்குச் செல்வதில்லை எனவும், இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Advertisement
Advertisement