கியாரா அத்வானி பிகினி புகைப்படத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா!
04:51 PM May 28, 2025 IST | Murugesan M
கியாரா அத்வானியின் பிகினி புகைப்படத்தைப் பகிர்ந்து இயக்குநர் ராம் கோபால் வர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
'வார் 2' படத்தில் ஹிருதிக்ரோஷன், ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து கியாரா அத்வானி நடிக்கிறார். அந்த படத்தின் டீசர் சமீபத்திலேயே வெளியான நிலையில், அதில் கியாரா அத்வானி பிகினியில் நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
இந்நிலையில் இதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இயக்குநர் ராம் கோபால் வர்மா ஆபாசமாகப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராம் கோபால் வர்மாவைப் பலரும் கடுமையாக விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தனது பதிவை நீக்கியுள்ளார்.
Advertisement
Advertisement