கிருஷ்ணகிரி : மதுபான பாட்டில்களை மாணவர்களே அப்புறப்படுத்தும் அவலம்!
03:03 PM Jun 11, 2025 IST | Murugesan M
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறி வருகிறது.
இந்த பள்ளிக்குச் சுற்றுச்சுவர் மற்றும் மெயின் கேட் இல்லாததால், பலரும் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.
Advertisement
இதனால் காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களே, அவர்கள் விட்டுச்சென்ற மதுபான பாட்டில்களை கைகளால் அப்புறப்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தின் அருகிலேயே பெண்கள் தங்கும் விடுதியும் செயல்பட்டு வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement