குண்டும் குழியுமாக உள்ள சென்னை சாலைகள் : விபத்தில் சிக்கிய பெண் ஆட்டோ ஓட்டுநர்!
11:39 AM Jun 10, 2025 IST | Murugesan M
சென்னையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதாக, விபத்தில் சிக்கிய பெண் ஆட்டோ ஓட்டுநர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கதீட்ரல் சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் சிக்கி பிங்க் ஆட்டோ விபத்துக்குள்ளானது. ஆட்டோ கடுமையாகச் சேதமடைந்ததோடு, ஓட்டுநர் செம்பருத்தி என்பவரும் காயம் அடைந்தார்.
Advertisement
இது குறித்துப் பேசிய அவர், சென்னையில் எங்குப் பார்த்தாலும் குண்டும் குழியுமாக இருப்பதாகக் குற்றம்சாட்டினார். சாலைப் பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் விபத்துக்கள் நேரிடுவதாகவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement