குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று ஒரே நாளில் 57 திருமணங்கள்!
03:59 PM Jun 08, 2025 IST | Ramamoorthy S
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று ஒரே நாளில் 57 திருமணங்கள் நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுபமுகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும் வழக்கம். அந்த வகையில் வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான இன்று ஒரே நாளில் குன்றத்தூர் முருகன் கோயிலில் 57 திருமணங்கள் நடைபெற்றன.
Advertisement
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ஒரே நேரத்தில் திருமணங்கள் நடைபெற்றதாலும் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement