குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
07:17 PM Apr 09, 2025 IST | Murugesan M
குமரி அனந்தன் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், குமரி அனந்தன் அவர்கள், மதிப்புமிகு சமூக சேவைக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆர்வத்திற்காகவும் நினைவுகூரப்படுவார்.
Advertisement
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரபலப்படுத்துவதற்காகவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் தனது இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
Advertisement
Advertisement