For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

01:45 PM Jun 05, 2025 IST | Murugesan M
கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு

பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளியின் தாளாளரான மூர்த்தி என்பவரின் ஒரே மகள் காமாட்சி என்பவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

Advertisement

பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தைக் காணச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காமாட்சி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் பெங்களூரு விரைந்துள்ள நிலையில், பகல் 2 மணிக்குக் காமாட்சியின் உடல் உடுமலைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மைவாடி பிரிவில் உள்ள பள்ளி வளாகத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement