கேமராவுக்கு முன்னும் பின்னும் வெவ்வேறு நாடகம் போடும் திமுக - எல்.முருகன் விமர்சனம்!
மீண்டும் மீண்டும் ஒரே பொய்யைக் கூறி தமிழக மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக எம்.பி.க்கள் பற்றி தர்மேந்திர பிரதான் கூறியதை ஒட்டுமொத்த தமிழர்கள் பற்றி கூறியதாக பொய் பரப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நொடிக்கு நொடி என்ன நிகழ்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தும் பொய் பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் அடிப்படைக் கல்வி மீதான அக்கறையற்ற திமுக அரசு, கேமராவுக்குப் பின்னால் ஒரு நாடகமும், கேமரா முன்பு ஒரு நாடகமும் அரங்கேற்றி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் எந்தவொரு இடத்திலும் இந்தி திணிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ள எல்.முருகன், எதன் அடிப்படையில் இந்தி திணிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பொய் கூறுகிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சியும், அதிகாரமும் நிரந்தரமல்ல என்பதை மக்கள் வெகு விரைவில் உணர்த்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.