கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்று அருவியின் பாறை இடுக்கி சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!
04:59 PM Jun 08, 2025 IST | Ramamoorthy S
கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்று அருவியின் பாறை இடுக்கி சிக்கிய இளைஞரை அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
மதுரையை சேர்ந்த 4 இளைஞர்கள் கேரளாவிற்கு சுற்றுலா சென்ற நிலையில் இடுக்கி மாவட்டம் தூவல் அருவிக்கு சென்றுள்ளனர். அங்கு இயற்க்கை அழகை பார்த்து ரசித்ததோடு அருவியின் ஆபத்தான பகுதிக்கு சென்று செல்ஃபி எடுத்து கொண்டு இருந்தனர்.
Advertisement
அப்போது இளைஞர் ஒருவர் எதிர்பாராமல் கால் இடறி விழுந்து அருவியில் ஆழமான நீர் வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறை இடுக்கில் சிக்கி தவித்தார்.
இதனை கண்டு உடன் வந்த மற்ற இளைஞர்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து கயிறு கட்டி இளைஞரை பத்திரமாக மீட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Advertisement
Advertisement