கேரளா : 2 வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்மாமன்!
கேரளாவில் 2 வயது பெண் குழந்தை கிணற்றில் வீசி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீஜித் - ஸ்ரீது தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தந்தை ஸ்ரீஜித்துடன் தூங்கி கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அதில், ஸ்ரீதுவின் சகோதரரான ஹரிகுமார் 2 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது தெரியவந்தது. பணபிரச்னை விவகாரத்தில் சகோதரி மீதான கோபத்தில் குழந்தையை கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, குழந்தையின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், ஹரிகுமாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குழந்தை கொலை விவகாரத்தில் சாமியார் தேவதாஸ் என்பரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.