For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கொச்சி அருகே மூழ்கிய கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் இருந்த பொருட்களின் பட்டியல் வெளியீடு!

08:31 AM Jun 06, 2025 IST | Ramamoorthy S
கொச்சி அருகே மூழ்கிய கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் இருந்த பொருட்களின் பட்டியல் வெளியீடு

கொச்சி அருகே ஆழ்கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் இருந்த பொருட்களின் பட்டியலை கப்பல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலம் அரபிக்கடல் பகுதியில் கடந்த 24ஆம் தேதி லைபீரியா நாட்டு கப்பல் கவிழ்ந்து, அதன் 643 கண்டெய்னர்கள் நீரில் மூழ்கின.

Advertisement

அதைத்தொடர்ந்து, கேரள மற்றும் குமரி கடலோர பகுதிகளில் கண்டெய்னர் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் கரை ஒதுங்கிய நிலையில், அவற்றை கிரேன் உதவியுடன் கப்பல் நிர்வாகம் மீட்டது.

இந்நிலையில், கப்பல் கண்டெய்னரில் இருந்த பொருட்கள் பற்றி மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டதையடுத்து பொருட்களின் பட்டியலை வெளியிட வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்த நிலையில், பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisement

அதன்படி, கால்சியம் கார்பைடு, பிளாஸ்டிக் துகள்கள், தேங்காய், முந்திரி பருப்பு உள்ளிட்டவை கண்டெய்னர்களில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 கண்டெய்னர்களின் விவரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
Advertisement