கொடைக்கானல் குணா குகை அருகே ஆபத்தான முறையில் ரீல்ஸ் - இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
07:22 AM Jun 09, 2025 IST | Ramamoorthy S
கொடைக்கானல் குணா குகை அருகே ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
புகழ்பெற்ற கொடைக்கானல் குணா குகை பகுதியில் இதுவரை 13 பேர் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் வனத்துறையினர் கம்பிகளால் பாதுகாப்பு வேலி அமைத்துள்ளனர்.
Advertisement
இந்நிலையில் இளைஞர் ஒருவர் தனது உடல் மெலிந்ததைக் காட்டுவதற்காக கம்பிகளுக்கு நடுவே நுழைந்து சென்று ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி, இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Advertisement
Advertisement