கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு - சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது!
02:10 PM Jun 08, 2025 IST | Ramamoorthy S
கொலம்பியாவில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அதிபர் வேட்பாளர் மிகுவல் உரிப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சனிக்கிழமை கொலம்பிய வலதுசாரி எதிர்க்கட்சி செனட்டரும், அதிபர் தேர்தலுக்கான வேட்பாளருமான மிகுவல் உரிப் என்பவர் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
Advertisement
அப்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் 15 வயது சிறுவன் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
Advertisement