கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - பெருமாள் சாமியிடம் 1 மணி நேரம் விசாரணை!
07:05 PM Mar 13, 2025 IST | Murugesan M
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாவலர் பெருமாள் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் 1 மணி நேரம் விசாரணைக்கு மேற்கொண்டனர்.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள் சாமியை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்திருந்தனர்.
Advertisement
இதையொட்டி கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பெருமாள் சாமி ஆஜரானார். அவரிடம் 1 மணி நேரமாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement