கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது - முதல்வர் ஸ்டாலின்
12:27 PM Nov 04, 2025 IST | Murugesan M
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது எனக் கூறியுள்ளார்.
Advertisement
இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது எனத் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின்,
ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனையை பெற்றுத் தர உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Advertisement
மேலும், மகளிர் அடையும் முன்னேற்றம்தான் வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement