கோவையில் கல்லூரி மாணவி உயிரிழப்புக்குக் கல்லூரி நிர்வாகமே காரணம் : தாயார் குற்றச்சாட்டு!
01:30 PM Apr 16, 2025 IST | Murugesan M
கோவையில் கல்லூரி மாணவி 4ம் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், அவரது உயிரிழப்புக்குக் கல்லூரி நிர்வாகமே காரணம் எனத் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி இந்துஸ்தான் பாரா மருத்துவம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
Advertisement
கல்லூரியில் ஆயிரத்து 500 ரூபாய் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், சந்தேகத்தின் பேரில் அனுப்பிரியாவிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அனுப்பிரியா, கல்லூரியின் 4வது தளத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிகிறது. தனது மகள் தற்கொலை செய்து கொண்டதற்குக் கல்லூரி நிர்வாகமே காரணம் என மாணவியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
Advertisement