கௌதமாலாவில் எரிமலை வெடிப்பு : வானில் சூழ்ந்த கரும்புகை!
04:19 PM Mar 13, 2025 IST | Murugesan M
மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில் எரிமலை வெடித்து சிதறியதால் அந்தப் பகுதியில் கரும்புகை பரவியது.
கௌதமாலாவில் உறங்கும் எரிமலைகள் அதிக அளவில் காணப்படுவதால், அவை எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் அபாயம் நிலவுவதாக ஏற்கெனவே வானியல் ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.
Advertisement
அந்த வகையில் எரிமலை திடீரென வெடித்துச் சிதறியதால் வானில் கரும்புகை பரவியது. இதனால் பொதுமக்கள் முகக் கவசமும் கண் கண்ணாடியும் அணிந்து கொள்ள வேண்டும் என கௌதமாலா அரசு அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement